மகராஷ்ட்ரா ஓபன் என பெயர் மாற்றத்துடன் புனேவுக்கு இடம்மாறும் சென்னை ஓபன்!

மகராஷ்ட்ரா ஓபன் என பெயர் மாற்றத்துடன் புனேவுக்கு இடம்மாறும் சென்னை ஓபன்!
மகராஷ்ட்ரா ஓபன் என பெயர் மாற்றத்துடன் புனேவுக்கு இடம்மாறும் சென்னை ஓபன்!

இந்தியாவின் ஒரே ஏடிபி டென்னிஸ் தொடரான சென்னை ஓபன் டென்னிஸ் தொடர், 2018ம் ஆண்டு முதல் மகராஷ்ட்ரா ஓபன் என்ற பெயரில் புனேவில் நடத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடரை நடத்தும் உரிமை பெற்ற ஐஎம்ஜி-ரிலையன்ஸ் மற்றும் மகராஷ்ட்ரா மாநில டென்னிஸ் சங்கம் ஆகிய அமைப்புகள் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளன. நாட்டின் சிறப்பு வாய்ந்த டென்னிஸ் தொடர் தங்கள் மாநிலத்தில் நடத்தப்பட இருப்பதை வரவேற்பதாக மகராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார். சென்னையில் கடந்த 21 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்த சென்னை ஓபன் டென்னிஸ் தொடரில் ரஃபேல் நடால், ஸ்டான் வாவ்ரிங்கா, மரின் சிலிச் உள்ளிட்ட டென்னிஸ் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர். ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறும் ஏடிபி தொடரான இது, அடுத்தடுத்த தொடர்களுக்கு வீரர்களை தயார் செய்யும் என்ற பெருமை பெற்றது. கடந்த 2014ல் சென்னை ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற வாவ்ரிங்கா, அந்த தொடரை அடுத்து நடந்த மெல்போர்ன் ஓபன் தொடரிலும் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.  
 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com