[X] Close

கொரோனா காலத்துக்குப் பின் முதல் பயணம்.. வங்கதேசத்துக்கு மோடி செல்வதன் 'அரசியல்' பின்புலம்!

இந்தியா,சிறப்புக் களம்

Prime-Minister-Modi-is-to-visit-Bangladesh-after-Covid-19-pandemic-began

பிரதமர் மோடி இம்மாதம் 26-ம் தேதி வங்கதேசம் பயணம் மேற்கொள்கிறார். கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு, அவர் செல்லும் முதல் சர்வதேச பயணம் இது. வங்கதேசத்தின் தலைநகரமான டாக்காவில் நடைபெறும் அந்நாட்டின் சுதந்திர தின பொன்விழாவில் கலந்துகொள்கிறார்.


Advertisement

மார்ச் 26, 1971-ம் ஆண்டு கிழக்கு பாகிஸ்தான் தனியாக பிரிக்கப்பட வேண்டும் என்று ஷேக் முஜிபுர் ரஹ்மான் விடுதலை முழக்கமிடப்பட்டார். அது, பாகிஸ்தான் ராணுவ ஆட்சிக்குழு ஒடுக்குமுறையை நிகழ்த்த வழிவகுத்தது. ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, 93,000-க்கும் மேற்பட்ட படைவீரர்களைக் கொண்ட முழு பாகிஸ்தான் ராணுவப் படையினரையும் இந்திய ஆயுதப்படைகள் கைப்பற்றிய பின்னர், டிசம்பர் 16-ம் தேதி, அன்று வங்கதேசம் என்ற சுதந்திர நாடு உருவாக்கப்பட்டது. இந்த ஆண்டு ஷேக் முஜிபூர் ரஹ்மானின் பிறந்தநாள் நூற்றாண்டு ஆகும்.

தன்மொண்டியில் உள்ள வங்காளத்தின் நண்பர் என்று அறியப்படும் வங்கதேசத்தின் முதல் ஜனாதிபதியான பங்காபந்து வீட்டிற்கு பிரதமர் மோடி செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அது பங்கபந்து நினைவு அருங்காட்சியகமாக உள்ளது.


Advertisement

முன்னதாக, பிரதமர் மோடி கடந்த 2015-ம் ஆண்டு மேற்கொண்ட வங்கதேச பயணத்தின்போது இரு நாடுகளுக்கும் இடையே 22 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. மேலும், வங்கதேசத்துக்கு இந்தியா 2 பில்லியன் டாலர் கடன் வழங்கியுள்ளது. 1950களில் இருந்து நடைபெற்ற நிலம் மற்றும் மக்கள் பரிமாற்றத்தின் செயல்முறையை நிறைவு செய்தன.

டாக்காவில் நிலவும் சாதகமான ஆட்சி, இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகளில் அமைதியான சூழல் நிலவ காரணமாக இருக்கிறது என தற்போதைய பாகிஸ்தானுக்கான தூதர் ஜி பார்த்தசாரதி தெரிவித்துள்ளார். ``மியான்மர் மற்றும் வங்கதேசத்தில் நல்ல உறவு இருப்பதால் வடகிழக்கில் ஏற்படும் கிளர்ச்சியை எங்களால் சமாளிக்க முடிகிறது. வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் காலத்தில், வடகிழக்கு கிளர்ச்சிக் குழுக்களுடன் ஒத்துழைத்தது ஐ.எஸ்.ஐ வங்கதேசத்தில் இருந்து சுதந்திரமாக செயல்பட்டு வந்தது” என்று அவர் கூறுகிறார்.

இந்தியாவிற்கும் வங்கதேசத்துக்கும் இடையிலான ராணுவ உறவுகள் வளரத் தொடங்கியுள்ளன. இரு நாடுகளின் கடற்படைகளும் தங்கள் முதல் இருதரப்பு கூட்டு கடற்படை பயிற்சியை 2019 அக்டோபரில் நடத்தின. மார்ச் 8 அன்று மோங்லா துறைமுகத்திற்கு இந்திய போர்க்கப்பல்கள் முதல் பயணம் மேற்கொண்டன. வங்கதேச சுதந்திர தினத்தின் பொன்விழாவை நினைவுகூரும் வகையில் இரு நாடுகளின் அரசாங்கமும் ராணுவமும் தொடர்ச்சியான நிகழ்வுகளை வரிசைப்படுத்தியுள்ளனர்.


Advertisement

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் 2019-20ல் 10 பில்லியன் டாலருக்கும் அதிகமாக இருந்தது. இது மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருநாடுகளும் நீண்ட காலமாக விவாத்தில் உள்ள CEPA எனப்படும் ஒரு விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் இது கணிசமாக உயரும். (ஒரு CEPA என்பது அடிப்படையில் ஒரு சுதந்திர வர்த்தக ஒப்பந்தமாகும். இது இரு நாடுகளுக்கும் இடையிலான பொருட்களை விரைவாக அனுப்பும் செயல்திட்டம்).

மேற்கு வங்கம், வங்கதேசத்துடன் 4,156 கி.மீ எல்லையை பகிர்ந்து கொள்கிறது. இந்தியாவில் இது மிக நீளமானதாகும். எனவே வங்கதேசத்துடான எந்த ஒரு அணுகலுக்கும் இந்த மாநிலம் முக்கியமானது. இதற்கும், இன்ன பிற காரணங்களுக்கும் பாஜக மேற்கு வங்கத் தேர்தலில் வெற்றிபெற ஆர்வமாக உள்ளது. பிரதமர் மோடியின் டாக்கா வருகை மேற்கு வங்கத்தில் வாக்குப்பதிவு துவங்குவதோடு ஒத்துப் போகிறது (மார்ச் 27). ஃபரித்பூர் மாவட்டத்தில் உள்ள ஓரகாண்டி சன்னதி மற்றும் பாரிசல் மாவட்டத்தில் சுகந்த சக்திபீத் ஆலயங்களுக்கு பிரதமர் மோடி வருகை தருவதாக செய்தி நிறுவனமான யுஎன்ஐ மார்ச் 5-ம் தேதி செய்தி வெளியிட்டது.

image

அப்படி பார்க்கும்போது, வங்கதேசத்தில் உள்ள இந்த இரண்டு ஆலயங்களும் மாதுவா சமூகத்தால் போற்றப்படுகின்றன. 1947-க்குப் பிறகு மேற்கு வங்கத்திற்கு குடிபெயர்ந்த இன்றைய வங்கதேசத்தில் தோன்றிய இந்து வைஷ்ணவ வங்காளிகளின் ஒரு பிரிவுதான் மாதுயாக்கள். இந்த அகதிகள் மாநிலத்தில் சுமார் 30 மில்லியன் வாக்காளர்களைக் கொண்ட ஒரு சிறிய, ஆனால் செல்வாக்குமிக்க கூட்டணியை உருவாக்குகின்றனர்.

மாநிலத் தேர்தல்களின்போது பிரசாரம் செய்யும் பிரதமர் மோடி அடிக்கடி `டபுள் என்ஜின்’ என்ற வார்த்தையை பயன்படுத்துவதை பார்க்க முடியும். இதற்குக் காரணம் மாநிலத்திலும் மையத்திலும் ஒரே கட்சியை ஆட்சியில் வைத்திருப்பதன் நன்மைகளைப் பெற முடியும் என்பதை சுட்டிக்காட்டவே அவர் கடந்த காலத்தில் இந்த வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறார்.

மேற்கு வங்கத்தில் ஆறு ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வங்கதேசத்துடனான தீஸ்டா நதி நீர் பகிர்வு ஒப்பந்தத்தை தீர்க்க உதவுவோம் என்றும் முழங்கியிருக்கிறார். தீஸ்டா, சிக்கிமிலிருந்து மேற்கு வங்கத்தில் பாய்ந்து வங்கதேசத்தில் தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement
[X] Close