[X] Close

“இனி நான் அடிக்கிற ஆள் எல்லாம் எதிரிதான்” - கமல்ஹாசன்

சுடச்சுட

The-person-I-hit-now-is-the-enemy-of-everything

கூட்டணிக்கு யார் வந்தாலும் அரவணைப்போம் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்


Advertisement

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், ஐ.ஜே.கே தலைவர் ரவி பச்சமுத்து, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் ஆகியோர் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அவர்கள் பேசும் போது எங்கள் கூட்டணியை இனி முதல் கூட்டணி என்று அழைக்க வேண்டும் என்றனர்.

image


Advertisement

அப்போது பேசிய கமல்ஹாசன் கூறும் போது, “கூட்டணிக்கு  யார் வந்தாலும் அரவணைப்போம். ஸ்டாலின் உள்பட எல்லோர் மீதும் விமர்சனங்களையும் வைப்பேன். இனி நான் அடிக்கிற ஆள் எல்லாம் எதிரிதான். தேமுதிகவை பொன்ராஜ் அழைத்தது எனக்கு தெரியாது. ஆளுங்கட்சியையும் நான் விமர்சித்து இருக்கிறேன். அகற்றப்பட வேண்டியவர்கள் இருவரும் தான். முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நாளை காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும்” என்றார்.

image

சரத்குமார் கூறும் போது, “முதல்வர் வேட்பாளர் கமல்ஹாசன் தான். நல்லவர்களை கூட்டணிக்கு வரவேற்கிறோம்.” என்றார்.


Advertisement

ராதிகா சரத்குமார் கூறும் போது, “ எங்கள் கூட்டணி விஷ்வரூபம் எடுத்த கூட்டணி, இது கண்டிப்பாக வெற்றிக் கூட்டணி. இது தொடரும். ஆரம்பிப்போமா என்று நம்மவர் ஒரு வீடியோவில் சொல்லி பார்த்தேன். ஆரம்பிக்கலாமா” என்றார்.

ரவி பச்சமுத்து கூறும் போது “ எங்கள் கூட்டணி விடிவெள்ளியாக இருக்கும். மக்கள் நீதி மய்யம், ஐ.ஜே.கே., ச.ம.க. கூட்டணிதான் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும். தமிழக எதிர்காலம், மக்களின் நலனுக்காக இந்த கூட்டணி வெற்றி பெற வேண்டும்” என்றார்.


Advertisement

Advertisement
[X] Close