Published : 09,Mar 2021 12:38 PM

துப்பாக்கி சுடுதலில் 6 பதக்கங்கள் வென்ற அஜித்துக்கு சீமான் வாழ்த்து

Seeman-congratulates-Ajith-on-winning-6-medals-in-sniper

இன்றைய இளைய தலைமுறையினர் ஒவ்வொருவரும் தனது தனித்திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்கேற்பத் திகழும் தம்பி அஜித்க்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன் என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

இது தொடர்பாக சீமான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் “சென்னையில் நடைபெற்ற 46-வது தமிழ்நாடு மாநிலத் துப்பாக்கி சுடுதல் முதல்நிலைப் போட்டியில் ‘சென்னை ரைஃபிள் கிளப்’ அணிக்காக தம்பி அஜித்குமார் அவர்கள் பங்கேற்று 6 பதக்கங்களை வென்ற செய்தியறிந்து பெருமகிழ்ச்சி அடைந்தேன்.

தம்பி அஜித் திரைப்பட நடிகராக மட்டுமின்றி, துப்பாக்கி சுடுதல் , இரண்டு, நான்கு சக்கர வாகனப் பந்தயங்களில் பங்கெடுத்தல், நவீன எந்திரப் பொறிகளை உருவாக்குதல் உள்ளிட்டப் பன்முகத்திறமைகளைக் கொண்டவராக விளங்குவது பாராட்டுக்குரியது.

இன்றைய இளைய தலைமுறையினர் ஒவ்வொருவரும் தனது தனித்திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்கேற்பத் திகழும் தம்பி அஜித் அவர்கள் தொடர்ந்து மேலும் பல சாதனைகளைப் புரிய எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்