[X] Close

அதிமுக தேர்தல் அறிக்கை... ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆலோசனை

சுடச்சுட

EPS-and-OPS-discussion-about-constituency-candidate-list

அதிமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிடும் தேதி குறித்து ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.


Advertisement

பாமக மற்றும் பாஜகவுடன் தொகுதி பங்கீடு கையெழுத்தான நிலையில் மற்ற கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது பற்றியும் இந்த ஆலோசனை நடைபெறுகிறது. அதிமுகவின் 6 பேர்கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் மார்ச் 5ஆம் தேதி வெளியானது. இன்று மாலைக்குள் அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் அறிக்கையுடன் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வது குறித்தும் அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. கே.பி முனுசாமி மற்றும் வைத்தியலிங்கம் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளும் இந்த ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close