[X] Close

எம்.எல்.எம். மூலம் ரூ.1,500 கோடி மோசடி: தெலங்கனாவில் அரசு ஊழியர்கள் உள்ளிட்ட கும்பல் கைது

இந்தியா

Hyderabad-cops-unplug-Rs-1500-crore-MLM-racket-24-held

தெலங்கானாவில் சிந்து விவா என்ற பெயரில் ரூ.1,500 கோடி மோசடியில் ஈடுபட்ட கும்பலை சைபராபாத் காவல்துறையினர் கைது செய்தனர்.

வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கலாம். வேலையே செய்ய வேண்டாம். ஆனால், மாதம் பல ஆயிரங்கள் வருவாய் கிடைக்கும். இந்த கவர்ச்சி வார்த்தைகள்தான் எம்.எல்.எம். எனப்படும் மல்டி லெவல் மார்க்கெட்டிங் (Multi level marketing)-ன் அடிநாதம்.

image


Advertisement

ஒரு நிறுவனத்தில் குறிப்பிட்ட தொகையை செலுத்தி நீங்கள் உறுப்பினராகினால், அதே நிறுவனத்தில் நீங்கள் உறுப்பினராக சேர்த்துவிடும் ஒவ்வொரு நபரும், அவர் இணைத்து விடும் நபருக்கும் ஏற்ப உங்களுக்கு வருவாய் கிடைக்கும் எனக் கூறி ரூ.1,500 கோடி வரை மோசடி செய்துள்ளது பெங்களூருவைச் சேர்ந்த சிந்து விவா என்ற நிறுவனம்.

இது தொடர்பாக தெலங்கானாவில் பலர் ஏமாற்றப்பட்டிருப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்ததைத் தொடர்ந்து தனிப்படை அமைத்து விசாரணையை சைபராபாத் காவல்துறையினர் தொடங்கினர் . அதில், பெங்களூருவைச் சேர்ந்த அபிலாஷ் தாமஸ், பிரேம்குமார் ஆகியோர் பல்வேறு ஊர்களின் தங்கள் கிளைகளை தொடக்கி 10 லட்சத்திற்கும் அதிகமானோரை ஏமாற்றியிருப்பது உறுதியாகியுள்ளது.

image


Advertisement

தெலங்கானாவில் மட்டும் இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் மூவர் தெலங்கானா அரசு ஊழியர்கள் என்பது தெரியவந்துள்ளது. அவர்களிடம் 20 கோடி ரூபாய் வரை பணத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர், தலைமறைவாகவுள்ளவர்களை தேடி வருகின்றனர். குறுகிய காலத்தில் அதிக லாபம் ஈட்ட வேண்டும் என எண்ணுபவர்களை குறிவைத்து இதுபோன்ற மோசடிகள் தொடர்வர்தால், நிதி முதலீடுகளில் மக்கள் கூடுதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.


Advertisement

Advertisement
[X] Close