சீர்காழி அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 4 கிலோ வெள்ளி கொலுசுகள் மற்றும் ரூ.90 ஆயிரம் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி இரயில்வே ரோட்டை சேர்ந்த பாக்சந்த் என்பவரின் மகன் அபிஷேக் 30. இவர் சீர்காழி பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று காலை தனது காரில் 4 கிலோ எடையுள்ள பழைய வெள்ளி கொலுசுகள் மோதிரங்கள் உள்ளிட்ட பொருட்களை பாலிஷ் செய்வதற்காக ரூ.90 ஆயிரம் ரொக்க பணத்துடன் சென்னைக்கு சென்றுள்ளார்.
இதையடுத்து சீர்காழி - சிதம்பரம் புறவழிச்சாலையில் காரை நிறுத்திய தேர்தல் பறக்கும் படையினர் விசாரித்தபோது வெள்ளி நகை மற்றும் பணத்திற்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால் அவற்றை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை சீர்காழி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் வட்டாட்சியருமான ஹரிதரனிடம் ஒப்படைத்தனர்.
Loading More post
8வது நாள், 20 டிக்கெட்டுகள், ரூ.4,420 வசூல்.. கங்கனாவின் ‘தாகத்’ படத்துக்கு சோதனை!
உச்சம் தொட்ட பெட்ரோல் விலை.. பாகிஸ்தான் அரசு எடுத்த புதிய முடிவு.. மகிழ்ச்சியில் மக்கள்!
‘கோடையை சமாளிக்க உதவும்‘ - 20 நாட்களில் சென்னை வந்தடைந்த 1 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீர்
’கருணாநிதி சிலை திறக்க மிகப் பொருத்தமானவர் வெங்கையா நாயுடு’ - முதல்வர் ஸ்டாலின்
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி