Published : 06,Mar 2021 04:51 PM
பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு : தேர்தல் ஆணையம்

தமிழக சட்டமன்ற தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு மாம்பழம் சின்னத்தை ஒதுக்கியிருக்கிறது தேர்தல் ஆணையம்.
பாமகவின் கோரிக்கையை ஏற்று தமிழக சட்டமன்ற தேர்தலில் பாமகவுக்கு மாம்பழம் சின்னத்தை ஒதுக்கியிருக்கிறது இந்திய தேர்தல் ஆணையம். புதுச்சேரியில் ஏற்கனவே மாம்பழம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருந்தது.
அதிமுகவின் கூட்டணியில் 23 தொகுதிகளை பெற்றுள்ள பாமக, அந்த தொகுதிகளில் மாம்பழம் சின்னத்தில் போட்டிடுகிறது.