
பரப்பன அக்ரஹார சிறையிலுள்ள சசிகலாவை சந்திக்க அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று காலை பெங்களூரு புறப்பட்டுச் சென்றார். இதையொட்டி, டிடிவி தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 3 பேர் முன்னதாகவே பெங்களூரு சென்றுள்ளனர். தினகரனின் ஆதரவு எம்எல்ஏக்களான தங்க தமிழ்ச்செல்வன், கதிர்காமன் மற்றும் ஜக்கையன் ஆகிய மூவரும் நேற்றிரவு 7.30 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு பெங்களூரு சென்றுவிட்டனர்.
இது தொடர்பாக இரு தினங்களுக்கு முன்னர் புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த தினகரன், அதிமுக அணிகள் இணைப்புக்கு சாதகமான சூழல் இல்லாததால், சசிகலாவை சந்தித்து கட்சிப் பணிகளை தொடர்வது குறித்து பேசப்போவதாகக் கூறியிருந்தார்.