Published : 04,Mar 2021 11:00 PM

’1991 முதல் 2016 வரை’ சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரஸ் பெற்றதும் வென்றதும்...ஒரு பார்வை!

A-look-at-the-Congress-vote-percentage-in-past-elections-

சட்டப்பேரவைத் தேர்தலில் இன்று மாலை நிலவரப்படி, காங்கிரசுக்கு 22 இடங்கள் வரை வழங்க திமுக முன்வந்திருப்பதாக கூறப்படுகிறது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் போட்டியிட்ட இடங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.

  • 1991ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி மறைவைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் 65 தொகுதிகளில் களம் கண்ட காங்கிரஸ் 60 இடங்களில் வென்றது. வாக்கு சதவீதம் 15.19

image

  • 1996 ஆம் ஆண்டு மீண்டும் அதிமுகவுடன் இணைந்து 64 தொகுதிகளில் இடங்களில் போட்டியிட்டும் ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை. வாக்கு சதவீதம் 5.61ஆக குறைந்தது.
  • 2001ஆம் ஆண்டு அதிமுக கூட்டணியில் காங்கிரஸ் 14 தொகுதிகளில் போட்டியிட்டு பாதி தொகுதிகளில் வென்றது. வாக்கு சதவீதம் 2.48
  • 2006ஆம் ஆண்டு திமுக கூட்டணியில் களமிறங்கிய காங்கிரஸ் போட்டியிட்ட 48 தொகுதிகளில் 34 இடங்களை கைப்பற்றியது. வாக்கு சதவீதம் 8.38.
  • அதே கூட்டணியில் 2011ஆம் ஆண்டில் 63 இடங்களை கேட்டுப்பெற்று அதில் 5ல் மட்டுமே வெற்றி பெற்றது. வாக்கு சதவீதம் 9.3
  • 2016ஆம் ஆண்டு திமுக கூட்டணியில் 41 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரசுக்கு 8 தொகுதிகள் மட்டுமே கிடைத்தன. வாக்கு சதவீதம் 6.42.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்