[X] Close

கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் களமிறங்கும் வி4 மக்கள் கட்சி!

சுடசுட

கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் களமிறங்கும் 'வி4 மக்கள் கட்சி'யினர் வேட்பாளர்களை அறிவித்து பிரசாரம் செய்து வருகின்றனர்.


Advertisement

கேரளாவில் அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் 'வி4 மக்கள் கட்சி'யினர் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தினர். கேரளாவில் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் மூன்று தொகுதிகளுக்கான வேட்பாளர்களை 'வி4 மக்கள் கட்சி'யினர் அறிவித்துள்ளனர்.

image


Advertisement

கொச்சி, எர்ணாகுளம், திரிக்ககாவில் போட்டியிடுகிறார்கள். "மாற்றத்திற்காக மக்கள் எங்கள் கட்சிக்கு வாக்களிப்பர்" என்று அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். கொச்சி மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட்ட இக்கட்சியினர், காங்கிரஸ் - இடதுசாரி கூட்டணி வேட்பாளர்களுக்கு சவாலாய் அமைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement
[X] Close