[X] Close

கோலி - பென் ஸ்டோக்ஸ் இடையே மைதானத்தில் தகராறு!

விளையாட்டு

Virat-Kohli-Ben-Stokes-Engage-in-Verbal-Duel

இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இடையே மைதானத்தில் வார்த்தை போர் மூண்டது.

இந்தியா - இங்கிலாந்து இடையிலான கடைசி மற்றும் 4-ஆவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். இதனையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக கிராவ்லியும், சிப்லேவும் களமிறங்கினர். இதில் அக்ஸர் படேல் பந்துவீச்சில் முதலில் சிப்லே ஆட்டமிழந்தார்.

image


Advertisement

இதனையடுத்து நிலைத்து நின்று விளையாட முயற்சி செய்த கிராவ்லி 9 ரன்களில் அக்ஸர் படேல் சுழலில் சிக்கி அவுட்டானார். இதனையடுத்து பெரும் பலமாக இருக்கும் கேப்டன் ஜோ ரூட் 5 ரன்களில் முகமது சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து இங்கிலாந்து அணி முதல் நாள் உணவு இடைவேளை வரை 3 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் சேர்த்து திணறி வருகிறது. இப்போது களத்தில் பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோ விளையாடி வருகின்றனர்.

image

இந்தப் போட்டியில் ஜோ ரூட் அவுட்டானதும் பென் ஸ்டோக்ஸ் களத்துக்கு வந்தார். அப்போது இந்திய பவுலர் முகமது சிராஜ் சரமாரியாக பவுன்சர் பந்துகளை பென் ஸ்டோக்ஸ்க்கு வீசினார். பின்பு, முகமது சிராஜ் பென் ஸ்டோக்ஸிடம் சென்று ஏதோ கூறினார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து கோலியும் அவரிடம் ஏதோ பேச இருவருக்குமான வாக்குவாதம் முற்றியது. இதனையடுத்து நடுவர்கள் தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தினர்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close