நடிகை பாலியல் வன்முறை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் திலீப். இவரது முன்னாள் மனைவி மஞ்சு வாரியர் வெளிநாடு செல்ல போலீசார் தடை விதித்துள்ளனர். அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் சிகாகோவில் அடுத்த வாரம் நடக்கும் விருது விழாக்களில் நடிகர் திலீப்பின் முன்னாள் மனைவி மஞ்சு வாரியர் கலந்துகொள்ள இருந்தார். நடிகை பாலியல் பலாத்கார வழக்கின் விசாரணை அடுத்தக் கட்டத்தை நோக்கி சென்றுகொண்டிருப்பதால், அங்கு செல்ல வேண்டாம் என்று போலீசார் அவரிடம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அவர் அங்கு செல்வதை ரத்து செய்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன், நடிகை மஞ்சு வாரியரை ஏடிஜிபி சந்தியா விசாரணை செய்தார். அப்போது திலீப்புக்கும் தனக்குமான பிரச்னைகளை அவரிடம் கூறியிருக்கிறார். இதையடுத்து நடிகை கடத்தப்பட்ட வழக்கில் மஞ்சு வாரியரையும் சாட்சியாக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதையடுத்தே அவரது வெளிநாட்டுப் பயணத்தை போலீசார் தடை செய்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.
இதுபற்றி மஞ்சு வாரியரின் செய்தி தொடர்பாளர் கூறும்போது, ‘ அமெரிக்காவில் நடக்கும் விருது விழாவுக்கு அவர் செல்லவில்லை என்பது உண்மைதான். ஆனால் போலீஸ் இதற்கு தடை விதிக்கவில்லை’ என்றார்.
Loading More post
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நிதின் கட்கரி எழுந்து நிற்காதது ஏன்? - அமைச்சர் மனோ தங்கராஜ்
கோயில் திருவிழா பாதுகாப்பில் குளறுபடி? - தடுப்பு மீது ஏறிக்குதித்த எம்பி ஜோதிமணி!
ஓ.பன்னீர்செல்வத்திடம் சில நிமிடங்கள் தனியாக பேசிய பிரதமர் மோடி!
ரயில் வரவேற்பு விழா: தேனி ரயில் நிலையத்தில் விடிய விடிய பறந்த 'தேசியக் கொடி'!
சமபலத்துடன் பெங்களூரு, ராஜஸ்தான் அணிகள் - இறுதிப் போட்டிக்கு செல்வது யார்? இன்று மோதல்!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!