[X] Close

’’முதல்வர் வேட்பாளராக என்னை முன்மொழிந்த சரத்குமாருக்கு மனமார்ந்த நன்றி’’ - கமல் ட்வீட்

தமிழ்நாடு,தேர்தல் களம்

Kamal-Haasan-thanks-Sarathkumar-in-Tweet

’’அன்புச் சகோதரர் சரத்குமாருக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்று கமல் ட்வீட் செய்துள்ளார்.


Advertisement

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை பகுதியில் சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் சரத்குமார், ராதிகா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய சரத்குமார் “மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி, ஐஜேகே கூட்டணி உறுதியாகியுள்ளது. கமல்ஹாசன்தான் முதல்வர் வேட்பாளர். மக்கள் விரும்பும் கூட்டணியாக எங்கள் கூட்டணி இருக்கும். கொள்கைரீதியாக ஒன்று சேர்கிறோம். சமத்துவம் இல்லையென்றால் நாடு வீணாய்போகும்” எனப் பேசினார்.

கமல்ஹாசன்தான் எங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் என சரத்குமார் கூறியதற்கு கமல் நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில், ‘’மக்கள் விரும்பும் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக என்னை முன்மொழிந்த சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர், அன்புச் சகோதரர் சரத்குமார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மக்கள் நலனில் அக்கறையுள்ளவர்கள் எதிர்வரும் நாட்களில் எம்மோடு கைகோர்ப்பார்கள். இம்முறை வெல்வது தமிழகமாக இருக்கட்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement
[X] Close