[X] Close

விராத் கோலியின் வேகம்: தினேஷ் கார்த்திக் சிலிர்ப்பு

Dinesh-Karthik-looking-forward-to-the-2019-world-cup

விராத் கோலி கொடுத்த நம்பிக்கையின் காரணமாக, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தொடரில் சிறப்பாக ஆடினேன் என்று தினேஷ் கார்த்திக் கூறினார்.

அவர் மேலும் கூறும்போது, ‘வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விக்கெட் கீப்பராக தோனிதான் இருப்பார் என்பது எனக்குத் தெரியும். அதனால் பேட்ஸ்மேனாக களமிறங்கினேன். மைதானத்தில் கோலி சிறந்த ஆலோசகராக செயல்பட்டார். எனக்கு அதிக நம்பிக்கையை ஊட்டியவர் அவர்தான். அதனால்தான் என்னால் நன்றாக ஆட முடிந்தது. அதே நேரம் விக்கெட்டுகளுக்கு இடையே வேகமாக ஓடுவதில் அவர் வல்லவர். ஒரு ரன்னை இரண்டு ரன்களாக மாற்றுவதில் குறியாக இருப்பார். ஆட்டத்தின் இடையே அவரது ஆலோசனைகள் சிறப்பாக இருக்கும். எந்த திசையில் பந்தைத் திருப்ப வேண்டும் என்று அவர் சொல்லும் ஆலோசனைகள் எனக்குப் பயனுள்ளதாக இருந்தது. அதனால் அந்தத் தொடரில் நன்றாக ஆடி, கோலியின் நம்பிக்கையைப் பெற்றிருக்கிறேன். 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆட வேண்டும் என்பது என் ஆசை’ என்றார்.


Advertisement

Advertisement
[X] Close