Published : 20,Jul 2017 03:08 AM

உலகளாவிய முதல் ரோபோடிக்ஸ் போட்டி: தங்கம் வென்று இந்திய மாணவர்கள் சாதனை

Indians-win-gold-and-bronze-at-first-global-robotics

அமெரிக்காவில் நடைபெற்ற உலகளாவிய ரோபோடிக்ஸ் போட்டியில் இந்திய மாணவர்கள் தங்கம் மற்றும் வெண்கலப்பதக்கத்தை வென்று சாதனை படைத்தனர்.

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் முதல் சர்வதேச ரோபோடிக்ஸ் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் 157 நாடுகள் கலந்துகொண்டன. இதில், இந்தியாவின் சார்பில் மும்பையிலிருந்து கலந்து கொண்ட மாணவர்கள் தங்கம், வெண்கலப்பதக்கம் மற்றும் ஜாங் ஹெங் என்ஜினீயரிங் டிசைன் விருதை வென்று சாதனை படைத்தனர். 15 வயது நிரம்பிய ராஹேஷ் தலைமையில் இந்திய அணி பங்கேற்றது. இதில், ஹர்ஷ் பட், ஆதிவ் ஷா, வட்சின், அத்யான், தேஜஸ், ராகவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்