Published : 20,Jul 2017 02:51 AM

நீட் தேர்வு விவகாரம்: தமிழக அமைச்சர்கள் டெல்லி பயணம்

neet-exams-tamilnadu-ministers-will-meet-central-ministers-today

நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக்கோரி, தமிழக அமைச்சர்கள் இன்று மத்திய அமைச்சர்களை சந்திப்பதற்காக டெல்லி சென்றனர்.

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது தொடர்பான தமிழக அரசின் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறும் முயற்சியாக தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், தங்கமணி ஆகிய 5 பேர் டெல்லி சென்றுள்ளனர். அவர்கள் அனைவரும் டெல்லியில் இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோரை நேரில் சந்திக்க உள்ளனர். அப்போது, நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெற்று தருமாறு தமிழக அமைச்சர்கள் வலியுறுத்த உள்ளனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்