Published : 02,Mar 2021 09:52 PM

பரமக்குடி: மனைவி மீது சந்தேகப்பட்டு தலையில் கல்லைபோட்டு கொலை செய்த கணவர்

Husband-who-suspected-the-wife-of-misconduct-and-stoned-to-death-in-Paramakudi

பரமக்குடியில் மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு தலையில் கல்லை போட்டு கணவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மருது பாண்டியர் நகரில் வசிக்கும் மாரியப்பன் மகன் வெற்றிசெல்வம்(31). இவருக்கும் மதுரை குணசேகரன் மகள் சரண்யா(27) ஆகியோருக்கும் கடந்த 9 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்ட காரணத்தால் சரண்யா மதுரையில் உள்ள அவரது தாயார் வீட்டில் குழந்தைகளுடன் தங்கி மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள உணவகத்தில் வேலை பார்த்து வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று குடிபோதையில் இருந்த வெற்றிசெல்வம், மனைவி சரண்யாவிற்கு போனில் தொடர்புகொண்டு குழந்தைகளையும் உன்னையும் பார்க்க வேண்டும் உடனே பரமக்குடிக்கு வா என்று கூறினார்.

image

சரண்யா வெற்றிசெல்வனின் ஆசை வார்த்தையை நம்பி பரமக்குடியில் மருதுபாண்டியர் பகுதியில் வெற்றிசெல்வம் வசிக்கும் வீட்டிற்கு தனியாக வந்துள்ளார். போதை தலைக்கேறிய வெற்றிசெல்வம் உனக்கு வேறு ஒருவருடன் தகாத உறவு உள்ளது எனக்கூறி கோபமடைந்து வீட்டிற்கு வெளியே இருந்த கருங்கல்லை தலையில் தூக்கிப் போட்டுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரண்யா பரிதாபமாக உயிரிழந்தார். பின் வெற்றிசெல்வம் பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.

இந்த தகவலின்பேரில் பரமக்குடி இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி தலைமையில் போலீஸார்கள் சம்பவ இடத்திற்குச்சென்று, இறந்த சரண்யாவின் உடலை கைப்பற்றி பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு இறந்த வீட்டில் தடயங்களை சேகரித்து விசாரணை செய்து வருகின்றனர். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்