உலகிலேயே மிகப்பழமையான டைனோசர் வகைகளில் ஒன்றான டைட்டனோசரின் தொல்பொருள் புதைப்படிவத்தை அர்ஜெண்டினாவில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
திங்கட்கிழமை (மார்ச்1) இதை கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள் இதுபற்றி கூறுகையில், 140 மில்லியன் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த நீண்ட கால்கள் மற்றும் நீண்ட கழுத்தைக்கொண்ட, செடிகொடிகளை சாப்பிடும் டைனோசர் வகைகளில் ஒன்றான நிஞ்ஜாட்டியன் சபாடாய் வகையைச் சேர்ந்தது.
இந்த டைனோசரின் முழுமையடையாத எலும்புக்கூடுதான் நெயுக்யூனின் தென் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வகை டைனோசர்கள்தான் முதன்முதலில் அழிந்துபோனவை என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். அர்ஜெண்டினாவைச் சேர்ந்த ஆராய்ச்சி எழுத்தாளரான பப்லோ கல்லினா இதுபற்றி கூறுகையில், டைனோசர்களின் புதைபடிவங்கள் உலகில் பல இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் இதற்குமுன்பு பழமையானது எனது பதிவுசெய்யப்பட்ட டைனோசரைக் காட்டிலும், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த புதைபடிவம் உலகிலேயே மிகவும் பழமையானது என்கிறார்.
இந்த நிஞ்ஜாட்டியன் டைனோசர்கள் மிகவும் பெரிய உருவம் கொண்டவை. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது கிட்டத்தட்ட 65 அடி உருவமுடையது. ஆனால் அர்ஜெண்டினாவில் கண்டுபிடிக்கப்பட்ட மற்ற டைனோசர்கள் கிட்டத்தட்ட 115 அடிகூட இருந்திருக்கிறது என்கிறார் பப்லோ.
தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த டைட்டனோசரின் எலும்புக்கூடை வைத்து ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
Loading More post
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ்.. அதிக முறை கடைசி இடத்தை பிடித்த அணி எது?
செம்மலை, ஜெயக்குமார்.., மாநிலங்களவை அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் தொடரும் இழுபறி!
2 வருடமாக அவதிப்பட்ட மகன்; தியாக ரூபத்தில் வந்த தாய் - ரோபோ உதவியுடன் மருத்துவர்கள் சாதனை
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்