புதிய கட்சி தொடங்குவதற்கான அறிவிப்பு வெளியிடும் நாட்கள் 7 ஆக குறைப்பு - தேர்தல் ஆணையம்

புதிய கட்சி தொடங்குவதற்கான அறிவிப்பு வெளியிடும் நாட்கள் 7 ஆக குறைப்பு - தேர்தல் ஆணையம்
புதிய கட்சி தொடங்குவதற்கான அறிவிப்பு வெளியிடும் நாட்கள் 7 ஆக குறைப்பு - தேர்தல் ஆணையம்

புதிய கட்சி தொடங்க தேர்தல் தொடர்பான பொது அறிவிப்பை வெளியிடும் நாட்கள் 30லிருந்து 7ஆக குறைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

7 நாட்களில் புதிய கட்சி தொடர்பான அறிவிப்பை வெளியிடும் இந்த உத்தரவு தமிழகம் உள்ளிட்ட தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களுக்கு மட்டும் பொருந்தும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.

ஒருவர் கட்சி தொடங்குகிறார் என்றால் அது தொடர்பான அறிவிப்புகளை ஆங்கிலம் மற்றும் மற்றொரு உள்ளூர் மொழி என இரண்டு நாளிதழ்களில் விளம்பரம் செய்திருக்க வேண்டும். அதுதொடர்பான விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிவைக்க வேண்டும். இந்திய தேர்தல் ஆணையம் அதை பரிசீலித்து பொதுவெளியில் அறிவிப்பார்கள். அதற்கு பொதுமக்கள் யார்வேண்டுமானாலும் தங்கள் ஆட்சேபனைகளைத் தெரிவிக்கலாம்.

ஆனால் இந்த ஆண்டு கொரோனா காரணமாக கட்சியை பதிவு செய்வதில் சிரமங்கள் இருந்தநிலையில், 30 நாட்களானது 7 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com