தமிழக சட்டமன்ற தேர்தல் காரணமாக திரைப்படங்களின் வெளியீடு பாதிக்கப்படுகிறது எனவும் படங்களை வெளியிடலாமா? வேண்டாமா என்ற குழப்பத்தில் தயாரிப்பாளர்கள் இருக்கின்றனர் எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழகத்தில் ஏப்ரல், மே மாதங்களை உள்ளடக்கிய கோடை விடுமுறையில் ஏராளமான படங்கள் வெளியாவது வழக்கம். அதிலும் இந்த ஆண்டு மார்ச் 26 ஆம் தேதி முதலே முன்னணி நடிகர்களின் படங்களை வெளியிட திட்டமிட்டிருந்தனர். அதில் மார்ச் 26-ம் தேதி சிவகார்த்திகேயனின் 'டாக்டர்', ஏப்ரல் 2-ல் கார்த்தி நடித்துள்ள சுல்தான், ஏப்ரல் 9-ம் தேதி தனுஷின் கர்ணன், ஏப்ரல் 14-ல் விஜய் சேதுபதியின் 'துக்ளக் தர்பார்' உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என அறிவித்துள்ளனர்.
தமிழில் மாஸ்டரை தவிர அண்மையில் வெளியான எந்தப் படமும் திரையரங்கு உரிமையாளர்களுக்கு லாபத்தை கொடுக்கவில்லை. இதனால் மார்ச், ஏப்ரல் மாதங்கள் தங்கள் தொழிலை மீட்கும் என நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். ஆனால் ஏப்ரல் 6-ம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தப் படங்களை திட்டமிட்டப்படி வெளியிடுவதில் சிக்கல் உருவாகியுள்ளது எனக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் தேர்தல் நடைபெறுவதால் தங்கள் படங்களை விளம்பரப்படுத்துவது கடினம் என்று தயாரிப்பாளர்கள் கருதுகின்றனர். மேலும் பல கட்சிகளின் அரசியல் கூட்டங்கள் நடைபெறும் என்பதால் திரையரங்கிற்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை குறையும் என்றும் அச்சப்படுகின்றனர். இதனால் தங்கள் படங்களின் வெளியீட்டை தள்ளி வைக்க திட்டமிடுவதாகவும் தகவல் வெளியாகிறது.
டாக்டர், சுல்தான், கர்ணன் என அனைத்து படங்களும் தங்களுக்கான வெளியீட்டு தேதியை பேசி உறுதி செய்துகொண்டுள்ளனர். இதில் யாராவது ஒருவர் வெளியீட்டு தேதியை மாற்றினால் நாமும் மாற்றலாம் என சம்பந்தப்பட்ட படங்களின் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். ஆனால் யார் முதலில் ரிலீஸ் தேதியை மாற்றுவது என்ற குழப்பத்தில் அவர்கள் உள்ளனர் என திரைத்துறையினர் கூறுகின்றனர்.
இந்தப் படங்கள் திட்டமிட்டபடி வெளியாகி வெற்றியடைந்தால் 80 கோடி ரூபாய் வரை ஷேர் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கேன்டீன், பார்க்கிங் போன்ற சினிமா சார்ந்த மற்ற வியாபாரம் மூலமும் லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால் தேர்தல் காரணத்தினால் ரசிகர்கள் திரையரங்கிற்கு வரவில்லை என்றால் இந்த ஒட்டுமொத்த வியாபாரமும் பாதிப்படையும்.
தமிழகத்தில் ஒவ்வொரு முறை தேர்தல் நடைபெறும் போதும் திரைப்படங்களில் வெளியீட்டில் மாற்றம் வருவது இயல்புதான் என விமர்சகர்கள் கூறுகின்றனர். அதேசமயம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் சினிமாவிற்கு கோடை விடுமுறையில் திட்டமிட்டபடி படங்களை வெளியீடுவதும் அவசியம் என்ற தெரிவிக்கின்றனர்.
Loading More post
'அவர் காட்டுத்தனமாக பந்துகளை எறிவார்' - பாக். பவுலர் குறித்து சேவாக் பேச்சு! யார் அவர்?
விசா முறைகேடு விவகாரம் - கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டரை டெல்லி அழைத்துச் செல்ல அனுமதி!
அஜித்தின் ‘ஆலுமா டோலுமா‘ பாடலுக்கு மெஹந்தி விழாவில் நடனமாடிய ஆதி, நிக்கி கல்ராணி
திருமணப் பரிசாக வந்த பொம்மை வெடித்து சிதறியதில் மணமகன் படுகாயம்! பழிவாங்கல் நடவடிக்கையா?
இந்தியாவில் வெளியானது விவோ எக்ஸ்80! சிறப்பம்சங்கள் என்னென்ன?
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்