80 வயதுக்கு மேற்பட்டோருக்கு தபால் வாக்குகள் - அரசியல் கட்சிகளுடன் சத்யபிரதா சாகு ஆலோசனை

80 வயதுக்கு மேற்பட்டோருக்கு தபால் வாக்குகள் - அரசியல் கட்சிகளுடன் சத்யபிரதா சாகு ஆலோசனை
80 வயதுக்கு மேற்பட்டோருக்கு தபால் வாக்குகள் - அரசியல் கட்சிகளுடன் சத்யபிரதா சாகு ஆலோசனை

பேரவைத் தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்டோர் தபால் வாக்குகளை செலுத்துவதற்கு முறையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் தமிழக அரசியல் கட்சிகள் கோரிககை விடுத்துள்ளன.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு ஆலோசனை நடத்தினார். இதில் அதிமுக, திமுக உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட 11 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். அப்போது தேர்தல் நடத்தை விதிமுறைகளை முறையாக கடைபிடிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும் வேட்புமனுவில் ஏதேனும் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதா என வினவிய அரசியல் கட்சியினர், அதற்கு தேவையான ஆவணங்கள் குறித்து முன்கூட்டியே தெரிவிக்க கோரிக்கை விடுத்தனர். தேர்தல் நடவடிக்கைகளின்போது பதியப்படும் வழக்குகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், ஒரே மாதிரியான சின்னங்கள் அடுத்தடுத்து மின்னணு இயந்திரத்தில் இடம்பெறுவதை தடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

அதோடு, 80 வயதுக்கு மேற்பட்டோர் தபால் வாக்குகளை செலுத்துவதற்கு போதிய ஏற்பாடுகளை முறையாக செய்ய வேண்டும் எனவும் அனைத்துக் கட்சிகளும் கோரிக்கை விடுத்தன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com