Published : 01,Mar 2021 05:02 PM
பீகாரில் தனியார் மருத்துவமனைகளிலும் கோவிட் 19 தடுப்பூசி இலவசம் : நிதீஷ் குமார் அறிவிப்பு

பீகார் மாநிலத்தில், தனியார்மருத்துவமனைகளிலும் கோவிட் -19 தடுப்பூசிஇலவசமாக செலுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர்நிதீஷ்குமார் தெரிவித்தார்.
பீகார் மாநில முதல்வர்நிதீஷ்குமார், கொரோனாதடுப்பூசி பீகார்மாநிலம் முழுவதிலும் "முற்றிலும்இலவசம்" என்றுஅறிவித்திருக்கிறார். "கொரோனா தடுப்பூசி தனியார் மருத்துவமனைகளில் கூட இலவசமாக கிடைக்கும். இதற்கு மாநில அரசு வசதி செய்யும்" என்று அவர் கூறினார். குறிப்பாக, தனியார் கோவிட்-19 தடுப்பூசி மையங்களில், தடுப்பூசி ஒரு டோஸுக்கு 250 ரூபாய் வரை வசூலிக்கலாம் என்று மத்திய அரசு சனிக்கிழமை அறிவித்தது.