[X] Close

தொகுதி பங்கீடு : மதிமுக, விசிகவுடன் திமுக இன்று பேச்சுவார்த்தை

தமிழ்நாடு,தேர்தல் களம்

DMK-talks-with-mdmk-and-vck-today

தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக இன்று மதிமுக, விசிகவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறது.

இன்னும் 11 நாட்களில் தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நடைபெற உள்ளது. அதனடிப்படையில் இன்னும் ஒருவாரத்தில் தனது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை முடிவு செய்ய திமுக திட்டமிட்டுள்ளது.

image


Advertisement

இதனிடையே மதிமுகவில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த, மல்லை சத்யா தலையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு இன்று திமுவிடம் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறது. இந்த பேச்சுவார்த்தை மாலை 5.30 மணிக்கு நடைபெற உள்ளது.

அதேபோல் தொகுதி பங்கீடு குறித்து விசிகவுடனும் திமுக இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறது. நேற்று முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் இன்று மதிமுக, விசிகவுடன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.


Advertisement

Advertisement
[X] Close