Published : 19,Jul 2017 04:13 PM
சிறையில் சசிகலாவுக்கு சலுகைகள் இல்லை: டிடிவி தினகரன்

பெங்களூரூ சிறையில் சசிகலாவுக்கு சலுகைகள் வழங்கப்பட்டதாக கூறப்படுவதை அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மறுத்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் சிறை விதிகளின்படியே சசிகலா சாதாரண உடையில் இருக்க அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறினார். இதுதொடர்பாக ஊடகங்களில் வெளியான காட்சிகள் தவறு என்றும் தினகரன் மறுப்பு தெரிவித்தார்.
முன்னதாக, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சகல வசதி கொண்ட அறைகளுடன் சசிகலா வண்ண உடைகளில் வலம் வருவது போன்ற வீடியோ காட்சிகள் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.