Published : 25,Jan 2017 10:10 AM

காவல்துறையினர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை: வைகோ வலியுறுத்தல்

Vaiko-urges-TN-Government-to-take-action-aganist-police-officials

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டோர் மீதும், எல்லை மீறிய காவல் துறையினர் மீதும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாணவர் போராட்டத்தில் ஊடுருவி வன்முறைக்கு தூபமிட்டவர்களை கண்டறிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். வெண் திரையில் கரும்புள்ளியாக ஒன்றிரண்டு சம்பவங்கள் காவல் துறையினரின் நன்மதிப்புக்கு பங்கம் விளைவித்திருப்பதாக அவர் கூறியுள்ளார். மாணவர்கள் மீதான வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெற வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்