சுழற்பந்து வீச்சாளார்கள் அக்ஷர் படேல் மற்றும் அஷ்வினின் சிறப்பான பந்து வீச்சின் மூலம் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியை இந்திய அணி இரண்டாவது நாளிலேயே கைப்பற்றி அசத்தியுள்ளது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்குச் செல்லப்போகும் இரண்டாவது போட்டியாளர் யார் என்பதை தீர்மானிக்கும் 4 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்டை இந்தியா கைப்பற்றியது. இறுதிப் போட்டிக்குச் செல்ல கடைசி இரு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் இரு அணிகளும் மூன்றாவது டெஸ்டில் களம் கண்டன.
அகமதாபாத் பிரமாண்ட நரேந்திர மோடி மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்ற இந்தப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்ட இந்தியா, முதல் இன்னிங்ஸில் 112 ரன்களுக்கு இங்கிலாந்தைச் சுருட்டியது. பின்னர் களமிறங்கிய இந்தியா இன்னிங்ஸை சிறப்பாக தொடங்கிய போதிலும், 145 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இருப்பினும் இரண்டாவது இன்னிங்ஸிற்கு 33 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.
இந்தியாவை 145 ரன்களுக்கு ஆல் அவுட் செய்த உற்சாகத்தில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து. ஆனால் இன்னிங்ஸின் முதல் பந்திலேயே அந்த உற்சாகத்தை இழந்தது. ரன் கணக்கை தொடங்கும் முன்னரே இரண்டு விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து, அடுத்தடுத்த விக்கெட்டுகளையும் அஸ்வின் மற்றும் அக்ஸர் படேலின் சுழலுக்கு பறிகொடுத்தது. 81 ரன்களுக்கே அந்த அணி இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்டமிழக்க, இந்திய அணிக்கு 49 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
அதிரடியாக இலக்கை துரத்திய இந்தியா விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை எட்டியது. இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 11 விக்கெட்டுகளைச் சரித்த அக்ஷர் படேல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து பதிவு செய்த மிகக் குறைந்த ஸ்கோர் இதுவே ஆகும். இதனிடையே 71 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது நாளிலேயே டெஸ்ட் போட்டியைக் கைப்பற்றியும் இந்தியா சாதனை படைத்துள்ளது.
தொடரில் கடைசி ஒரு போட்டி எஞ்சியுள்ள நிலையில், அந்த போட்டியில் வெற்றி பெறவில்லை என்றாலும், தோல்வி அடையாமல் இருந்தாலே இந்தியா டெஸ்ட் சாம்பியன் ஷிப் தொடரின் இறுதிக்கு முன்னேறிவிடும். இங்கிலாந்து வெற்றி பெறும் பட்சத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு வாய்ய்பு பிரகாசமாகிவிடும். இரண்டாவது டெஸ்டில் ஆடுகளத்தின் தன்மை குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளனர். இதன் எதிரொலியாக கடைசி போட்டியில் ஆடுகளத்தில் மாற்றங்கள் ஏதேனும் மேற்கொள்ளப்படுமா? மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் எந்த அணிக்கு சாதமாகும் என்ற கேள்விகள் இப்போதே அணி வகுக்கத் தொடங்கிவிட்டன.
Loading More post
``தமிழ்த்தாய் வாழ்த்து பாடாதது ஏன்?”-அறங்காவலர் பதவி ஏற்பில் கண்டித்த அமைச்சர் துரைமுருகன்
நீட் தேர்வு: விண்ணப்பிக்கும் அவகாசம் மே 20 வரை நீட்டிப்பு
பாகிஸ்தானில் இரு சீக்கியர்கள் சுட்டுக்கொலை - தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு
'கிருபானந்த வாரியாருக்கு நேர்ந்த நிலை அண்ணாமலைக்கு ஏற்படும்' ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை
சஹா அரைசதம்! சிஎஸ்கேவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அபாரம்!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?