கடுமையான நிதிநெருக்கடிக்கு மத்தியில் எம்எல்ஏக்களுக்கு ஊதிய உயர்வை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள நிலையில், தமிழக எம்.எல்.ஏ.க்கள் பெறும் ஊதிய விவரங்களையும், பிற மாநில எம்.எல்.ஏ.க்கள் ஊதியங்கள் குறித்தும் பார்க்கலாம்.
தமிழக எம்.எல்.ஏக்களுக்கு தற்போது ஊதியம் ரூ.55 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சத்து 5 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில், அடிப்படைச் சம்பளம் ரூ.8 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரமாகவும், ஈட்டுப்படி ரூ.7 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. தொலைபேசிப்படி ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.7 ஆயிரத்து 500 ஆகவும், தொகுதிப்படி ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாகவும், தொகுப்புப்படி ரூ.2 ஆயிரத்து 500ல் இருந்து ரூ.5 ஆயிரமாகவும், வாகனப்படி ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாகவும் உயர்ந்தப்பட்டுள்ளது. அஞ்சல்படி ரூ.2 ஆயிரம் என்பதில் மாற்றமில்லை. இது தவிர சட்டசபை கூடும் நாட்களில் தினப்படியாக ரூ.500, ரயிலில் ஏ.சி. இரண்டடுக்கு பெட்டியில் பயணக் கட்டணம், அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம் மற்றும் தொலைபேசி, டைப்பிஸ்ட் உள்ளிட்ட சலுகைகளும் அளிக்கப்படுகின்றன.
நாட்டிலேயே எம்.எல்.ஏ.க்களுக்கு அதிக ஊதியம் அளிக்கும் மாநிலங்களில் தற்போது தெலங்கானாவும் டெல்லியும் முதலிடத்தில் உள்ளன. தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கடந்த ஆண்டில் எம்.எல்.ஏ.க்களுக்கு 163 சதவீத ஊதிய உயர்வு அளித்தார். அடிப்படைச் சம்பளத்தை ரூ.12 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாகவும், மற்ற படிகளை ரூ.83 ஆயிரத்தில் இருந்து ரூ.2 லட்சத்து 30 ஆயிரமாகவும் உயர்த்தினார். இம்மாநில எம்.எல்.ஏ.க்கள் தற்போது மாத சம்பளமாக இரண்டரை லட்சம் ரூபாய் பெறுகின்றனர். இதே போல் டெல்லியிலும் இரண்டரை லட்சம்தான் சம்பளம்.
இதைத் தொடர்ந்து உத்தரப்பிரதேச எம்.எல்.ஏ. ரூ.2 லட்சத்து 10 ஆயிரமும், மகாராஷ்டிர எம்.எல்.ஏ ரூ.1 லட்சத்து 50 ஆயிரமும் பெறுகின்றனர்.
மிகக் குறைந்த ஊதியம் அளிக்கும் மாநிலங்களில் திரிபுரா முதலிடத்தில் உள்ளது. இங்கு எம்.எல்.ஏ. மாத ஊதியமாக ரூ.17 ஆயிரத்து 500 பெறுகிறார். நாகாலாந்து எம்.எல்.ஏ.க்களுக்கு மாத ஊதியமாக ரூ.18 ஆயிரம் அளிக்கப்படுகிறது. மணிப்பூரில் ரூ.18 ஆயிரத்து 500 ஆகவும், அசாமில் ரூ.20 ஆயிரமாகவும் உள்ளது.
Loading More post
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக விவசாயிகள் வேதனை!
ஐபிஎல்லில் ஜொலித்தவர்களுக்கு வாய்ப்பு! தென் ஆப்பிரிக்க டி20 தொடர் - இந்திய அணி அறிவிப்பு
கீழடி 8ஆம் கட்ட அகழாய்வில் இரும்பு உருக்காலை எச்சங்கள் கண்டெடுப்பு
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்