ஸ்ரீபெரும்புதூர் அருகே நான்காவது மாடியில் இருந்து விழுந்து இளம்பெண் இறந்த சம்பவம் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மாத்தூர் பகுதியில் உள்ள தனியார் குடியிருப்பில் கம்பத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் தனது குடும்பத்துடன் 4-வது மாடியில் வசித்து வருகிறார். ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவருக்கு இலக்கியா (33) என்ற மனைவியும் 3 1/2 வயதில் இரட்டை ஆண் குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில், நேற்றிரவு தினேஷ் வீட்டில் குடித்துக் கொண்டிருந்துள்ளார். இதனால் தினேஷுக்கும் இலக்கியாவுக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் நான்காவது மாடியில் இருந்து விழுந்த இலக்கியா சம்பவ இடத்திலேயே பலியானதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் அறிந்து விரைந்து வந்த ஒரகடம் காவல் துறையினர் இலக்கியாவின் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து அவரது கணவர் தள்ளிவிட்டு கொலை செய்தாரா அல்லது தற்கொலையா? என தினேஷை விசாரித்து வருகின்றனர்.
இளம்பெண் நான்காவது மாடியிலிருந்து கீழே விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
Loading More post
ராக்கெட்டுகளை ஏவுவதற்கு குலசேகரப்பட்டினத்தை தேர்வு செய்தது ஏன்?-இஸ்ரோ விஞ்ஞானி புதிய தகவல்
’குழந்தைகள் மார்க் விஷயத்தில் பெற்றோர்கள் இதை மட்டும் செய்யாதீங்க’- அமைச்சர் அன்பில் மகேஷ்
காலிப் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு இடைக்கால தடை! - நீதிமன்றம்
தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனராக தமிழகத்தைச் சேர்ந்த காவல் அதிகாரி ராஜன் நியமனம்!
கணவர் மரணம் குறித்து தவறான தகவலை பரப்பாதீங்க! - நடிகை மீனா வேண்டுகோள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்