வேலூர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் பெண்கள் கள்ளச்சாராயம் விற்று வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் வளையாம்பட்டு கிராமத்தில் பெண்கள் சாலையோரம் அமர்ந்து சாராயம் விற்கும் காட்சி புதிய தலைமுறைக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளது. அப்பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை தங்கு தடையின்றி வெட்டவெளியில் அமோகமாக நடக்கிறது. இது மட்டுமல்லாது மிஸ்டு கால் கொடுத்தால் வாகனத்தில் வந்து இருக்கும் இடத்திற்கு கள்ளசாராயம் கொடுப்பதும் தெரியவந்துள்ளது.
பல மாதங்களாக இப்படி கள்ளசாராய விற்பனை நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். விடியற்காலை 4 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை கள்ளசாராயம் விற்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். ஆனாலும் வளையாம்பட்டு பகுதிகளில் தொடர்ந்து கள்ளச்சாரய விற்பனை நடைபெற்று வருகிறது.
பள்ளி மாணவ, மாணவிகள் செல்லும் சாலையில் அச்சமின்றி கள்ளச்சாராயம் விற்கப்படுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Loading More post
`பண்டிகையை கொண்டாடுங்கடே....’ - உலக பிரியாணி தினத்தை கொண்டாடுவோம் வாங்க!
புகாரை ஏற்க மறுத்த போலீஸ்: சிசுவின் சடலத்துடன் எஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்ட தந்தை
கும்பகோணம்: தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத நிலையில் ஆற்றில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை
பரிதாபம் எப்படி வேலை செய்யுது பாத்தியா பையா.. இளைஞனின் சுவாரஸ்யமான ஏர்போர்ட் ட்ரிக்!
மீண்டும் ஒரு கொடூர விபத்து... கல்லட்டி பாதையின் அபாயத்தை இனியாவது உணர்வோமா?
`பண்டிகையை கொண்டாடுங்கடே....’ - உலக பிரியாணி தினத்தை கொண்டாடுவோம் வாங்க!
மீண்டும் ஒரு கொடூர விபத்து... கல்லட்டி பாதையின் அபாயத்தை இனியாவது உணர்வோமா?
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!