[X] Close

இந்திய அணியில் மீண்டும் வாஷிங்டன் சுந்தர்: இங்கிலாந்து முதலில் பேட்டிங்

விளையாட்டு

England-won-the-toss-and-batting-first-at-Pink-Ball-test

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இந்தியாவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்கிறது.


Advertisement

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகள் சென்னையில் நடைபெற்றது. அதில் முதல் போட்டியில் இங்கிலாந்தும், இரண்டாவதுப் போட்டியில் இந்தியாவும் வென்றது. இந்நிலையில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று 3 ஆவது டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது.

image


Advertisement

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளார். இந்திய அணியில் சிராஜூக்கு பதிலாக பும்ராவும், குல்தீப் யாதவுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.


Advertisement

இங்கிலாந்து அணி: டோம் சிப்லே, ஜாக் கிராவ்லி, ஜானி பேரிஸ்டோ, ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஒல்லி போப், பென் ஃபோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர், ஜாக் லீச், ஸ்டூவர்ட் பிராட், ஆண்டர்சன்.

இந்திய அணி: ரோகித் சர்மா, சுப்மன் கில், புஜாரா, கோலி, ரஹானே, ரிஷப் பன்ட், வாஷிங்டன் சுந்தர், அஸ்வின், அக்ஸர் படேல், இஷாந்த் சர்மா, பும்ரா.


Advertisement

Advertisement
[X] Close