மார்ச் 15 முதல் மீண்டும் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு?

மார்ச் 15 முதல் மீண்டும் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு?
மார்ச் 15 முதல் மீண்டும் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு?

கொரோனா காரணமாக தடைபட்ட 'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்பு மார்ச் 15-ஆம் தேதி தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினி நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் ‘அண்ணாத்த’. இந்தப் படத்தில் கதாநாயகியாகியாக நயன்தாரா நடிக்கிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்திவைக்கப்பட்ட படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் மீண்டும் தொடங்கியது. இதனிடையே படப்பிடிப்பில் பணியாற்றிய சிலருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்ட நிலையில் படப்பிடிப்பு தடைபட்டது.

அதனைத்தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினிக்கு இரத்த அழுத்தம் அதிகரித்தது. அதனைத்தொடர்ந்து அரசியல் பணிகளில் தீவிரமாக பணியாற்றி வந்த ரஜினி, மருத்துவர்களின் அறிவுரைப்படி அரசியல் கட்சித் தொடங்கப்போவதில்லை என அறிவித்தார்.

இந்நிலையில் ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பு பிப்., இறுதி அல்லது மார்ச் மாத ஆரம்பத்தில் மீண்டும் தொடங்க இருப்பதாக தகவல் வெளியானது. அது தொடர்பாக பிப் 17-ஆம் தேதி அண்ணாத்த படப்பிடிப்பில் ரஜினியை கலந்துகொள்ள படக்குழு கேட்டுக்கொண்டாதாகவும், அதற்கு மறுத்து தெரிவித்த ரஜினி மார்ச் இறுதியில் படப்பிடிப்பில் கலந்துகொள்வதாக கூறியதாகவும் சொல்லப்பட்டது.

இந்நிலையில் வருகிற மார்ச் 15 ஆம் தேதியிலிருந்து ரஜினி ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.  இந்தப் படப்படிப்பு ஈவிபி ப்ளிம் சிட்டி, கோவை, பொள்ளாச்சி ஆகிய இடங்களில் நடைபெற இருப்பதாகத் தெரிகிறது.  

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com