Published : 24,Feb 2021 12:52 PM

சசிகலாவுடன் சீமான், பாரதிராஜா சந்திப்பு

seeman-meeting-with-sasikala-in-tnagar

சென்னை தி.நகர் இல்லத்தில் சசிகலாவை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து பேசினார்.

ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பேசிய சசிகலா, “ஜெயலலிதாவின் உண்மையான உடன் பிறப்புகள் ஒன்றிணைந்து மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க வேண்டும்” என்றார்.

image

இதைத்தொடர்ந்து சென்னை தி.நகர் இல்லத்தில் சசிகலாவை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து பேசினார். மேலும், இயக்குநர் பாரதிராஜாவும் சசிகலாவை சந்தித்து பேசினார். முன்னதாக, சசிகலாவை சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், ராதிகா ஆகியோர் சந்தித்து பேசினர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சரத்குமார் மற்றும் ராதிகா சசிகலாவின் உடல்நிலை குறித்து விசாரிக்க வந்ததாக தெரிவித்தனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்