Published : 19,Jul 2017 11:00 AM
போர் காட்சிகளில் புதிய உத்திகள்: கிறிஸ்டோபர் நோலனின் அடுத்த திரைப்படம் டன்கிர்க்

பிரபலஹாலிவுட் இயக்குனர் புதிய உத்திகளைக் கையாண்டு எடுத்துள்ள டன்கிர்க் திரைப்படம் வெள்ளிக் கிழமை வெளியாகிறது.
பேட்மேன் பிகின்ஸ், த டார்க் நைட், த டார்க் நைட் ரைசஸ், இன்செப்சன், இண்டர்ஸ்டெல்லர் உள்ளிட்ட பிரபலமான ஹாலிவுட் திரைப்படங்களை இயக்கியவர் கிறிஸ்டோபர் நோலன். இவர் எடுத்துள்ள புதிய திரைப்படமான "டன்கிர்க்" இதுவரை இல்லாத வகையிலான யுத்தக் காட்சிகளைக் கொண்டிருக்கும் என திரைப்படக்குழுவின் தெரிவித்துள்ளனர்.
இந்தத் திரைப்படம், இரண்டாம் உலகப் போர்ப் பின்னணியைக் கொண்டது. பிரான்ஸின் டன்கர்க் கடற்கரைப் பகுதியில் தவித்த சுமார் 4 லட்சம் பிரிட்டிஷ் ராணுவ வீரர்களை மீட்ட வரலாற்றுக் கதை இந்தப் படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ரத்தம் தெறிக்கும் காட்சிகளைக் குறைத்துக் கொண்டு, மாறுபட்ட வகையில் ரசிகர்களைக் கட்டிப்போடும் உத்திகள் கையாளப்பட்டிருப்பதாக படத்தின் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் தெரிவித்திருக்கிறார்.