[X] Close

விஜய் ஹசோரா கோப்பை: தமிழகத்தை சுருட்டிய ஆந்திர அணி!

விளையாட்டு

TN-faced-defeat-against-Andhra-in-1st-match-against-Andhra

தமிழகத்துக்கு எதிரான விஜய் ஹசாரே கோப்பை 50 ஓவர் போட்டியில் ஆந்திர அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது.

மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூரில் நடைபெற்று வரும் விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாபை வீழ்த்திய தமிழகம் இன்று நடைபெற்றப் போட்டியில் ஆந்திரத்தை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆந்திர அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

image


Advertisement

கடந்தக் காலங்களில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய தமிழக அணி பேட்ஸ்மேன்களுக்கு ஆந்திர அணியின் பந்துவீச்சு சிம்மசொப்பனமாக விளங்கியது. தமிழக பேட்ஸ்மேன்களில் பாபா அபராஜித் 40, சோனு யாதவ் 37 ரன்கள் எடுத்தார்கள். இதர பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் வீழ்ந்தார்கள். இதனால் தமிழக அணி, 41.3 ஓவர்களில் 176 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

image

ஆந்திரத்தின் ஸ்டீபன், சோயிப் முகமது கான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். இந்த எளிதான இலக்கை 29.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது ஆந்திர அணி. ஆந்திர தொடக்க வீரர் அஸ்வின் ஹெப்பர், 5 சிக்ஸர்களுடன் 101 ரன்கள் எடுத்தார். சையத் முஷ்டக் அலி கோப்பையை வென்ற தமிழக அணி ஆந்திரத்துக்கு எதிராகப் படுதோல்வி அடைந்திருப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close