Published : 19,Jul 2017 06:46 AM
அரசியல் என்பது ட்விட்டரில் இல்லை: தமிழிசை

அரசியல் என்பது ட்விட்டரில் இல்லை, நிஜ தளத்தில் இருக்கிறது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
அரசியலுக்கு வருவது போன்ற தோற்றத்தை உருவாக்கும் வகையில் உள்ள கமல்ஹாசனின் ட்விட்டர் பதிவுக்கு பதிலளித்து கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், அரசியல் என்பது ட்விட்டரில் இல்லை, நிஜ தளத்தில் இருக்கிறது. கமல் அரசியலுக்கு வர நினைத்தால் ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் பேசாமல் நிஜ தளத்திற்கு வந்து பேச வேண்டும். வந்தால் முதலமைச்சராகத்தான் வருவேன் என்று அனைவரும் ஆசைப்பட்டால் யார்தான் தொண்டனாக இருப்பார்கள். யாரை முதலமைச்சராக தேர்வு செய்யவேண்டும் என்று தமிழக மக்களுக்கு நன்றாகத் தெரியும். அவர்கள் ஆராய்ந்து வாக்களிப்பார்கள் என்று கூறியுள்ளார்.