[X] Close

”டிராக்டரை கொளுத்தி விடுவேன்” மணல் கடத்தலை தடுத்த காவல்துறைக்கு மிரட்டல் விடுத்த ஆடியோ

குற்றம்

Nagai-AIADMK-leader-intimidated-the-police-to-stop-sand-smuggling

வேதாரண்யம் அருகே தேத்தாகுடி வடக்கு கிராமத்தில் அனுமதி இன்றி மணல் கடத்தல், டிராக்டரை கொளுத்தி விடுவதாக காவல் துறையினரை மிரட்டிய வீடியோ வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.


Advertisement

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே தேத்தாகுடி வடக்கு கிராமத்தில் அனுமதியின்றி கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தும் கலவை மண்ணை ஏற்றிச்சென்ற டிராக்டரை சப் இன்ஸ்பெக்டர் துரைராஜ் தலைமையிலான தனிப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்து ஓட்டுநர் சுரேந்திரனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

image


Advertisement

அப்போது சாலையில் வந்த டிராக்டரை வழிமறித்து பணி செய்ய விடாமல் தடுத்த, தேத்தாகுடி பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் ஆனந்தபாண்டி உள்பட 8 பேரையும் டிராக்டர் ஓட்டுனரையும் அழைத்துச் சென்றனர். தனிப்பிரிவு காவல்துறையினர் எதிரிலேயே டிராக்டரை கொளுத்தி விடுவதாக அதிமுகவினர் மிரட்டல் விடுத்ததுடன் காவல்துறையினரை வீடியோ  எடுத்துச் சென்றனர்.

இது குறித்த வீடியோ வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக 8 பேர் மீது வேதாரண்யம் காவல் நிலையத்தில் தனிப்பிரிவு போலீசார் புகார் செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்


Advertisement

Advertisement
[X] Close