சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பிப்ரவரி 25-ஆம் தேதி மத்திய ஆயுதப் படையினர் தமிழகம் வருகின்றனர்.
தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, அனைத்து கட்சியினரும் பரப்புரைகளில் முனைப்புடன் ஈடுபட்டுள்ளனர். அடுத்தக்கட்டமாக விருப்பமனு பெறும் பணிகளுக்கான ஏற்பாடுகளும் தீவிரமடைந்துள்ளன. தேர்தலுக்கான வாக்குச் சாவடிகள், வாக்கு இயந்திரங்கள், வாக்கு எண்ணப்படும் இடங்கள் எல்லாம் தயார் செய்யப்பட்டு வருகிறது. இரண்டு கட்டமாக தமிழகம் வந்த இந்திய தேர்தல் ஆணையக் குழு தேர்தல் ஏற்பாடுகள் குறித்து அரசியல்வாதிகளிடமும் அதிகாரிகளிடமும் ஆலோசனை நடத்தி விட்டுச் சென்றிருக்கிறது.
இதனால் மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் ஏப்ரல் இறுதியில் தேர்தல் நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், தேர்தலுக்காக பிப்ரவரி 25-ஆம் தேதி மத்திய ஆயுதப்படையினர் தமிழகம் வருகின்றனர். முதல் கட்டமாக ஆயுதப்படையின் 45 கம்பெனி போலீசார் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக தமிழகம் வருகின்றனர்.
வழக்கமாக மத்திய ஆயுதப்படையினர் தேர்தல் நெருங்கும் சமயத்தில்தான் குறிப்பிட்ட மாநிலத்திற்கு செல்வார்கள். ஆனால் தற்போது தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் முன்பே அவர்கள் தமிழகத்திற்கு வருவது கவனத்தை ஈர்த்துள்ளது.
Loading More post
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் கூட இல்லை.. நடப்பு சீசனில் தோனியின் பெர்ஃபாமன்ஸ் எப்படி?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!