[X] Close

பாலியல் வழக்கில் சர்ச்சையான தீர்ப்பளித்த நீதிபதிக்கு ஆணுறைகளை அனுப்பிய பெண்

இந்தியா

Woman-sends-condoms-to-judge-who-said-groping-without--skin-to-skin--touch-not-assault

பாலியல் வழக்கில் சர்ச்சைக்குரிய தீர்ப்பை வழங்கிய மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி புஷ்பா வி கனேடிவாலாவுக்கு, ஒரு பெண் 150 ஆணுறைகளை அனுப்பியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

மும்பை உயர்நீதிமன்றம் நாக்பூர் கிளையில் கூடுதல் நீதிபதியாக இருப்பவர் புஷ்பா கெனாடிவாலா. இவர் அண்மையில் போக்சோ வழக்கு ஒன்றில் கொடுத்த தீர்ப்பு மிகவும் சர்ச்சைக்குள்ளானது. ஆடைக்கு மேல் தீண்டுவது போக்சோவின் கீழ் வராது எனக்கூறி குற்றவாளியை அதிலிருந்து விடுவித்தார். இதையடுத்து உச்சநீதிமன்றம் அந்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்தது.

இதேபோன்று அதற்கு முன்பாக இரண்டு போக்சோ வழக்குகளிலும் சர்ச்சை தீர்ப்புகளை வழங்கியுள்ளார் புஷ்பா. இவ்விவகாரம் மக்கள் மத்தியில் பூதாகரமானது. இதையடுத்து புஷ்பா கெனாடிவாலாவை நிரந்தர நீதிபதியாக்கும் பரிந்துரையை உச்சநீதிமன்ற கொலீஜியம் திரும்பப்பெற்றது.

போக்ஸோ சட்டத்தின் கீழ் பாலியல் வன்கொடுமை வழக்கில் சர்ச்சைக்குரிய தீர்ப்பினை அளித்த நீதிபதி புஷ்பா வி கணேடிவாலாவுக்கு எதிராக, அகமதாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண் 150 ஆணுறைகளை அனுப்பியுள்ளார். 


Advertisement

"தோலுடன் தோல் தொடர்பு இல்லாமல்" ஆடைகளுக்கு மேல் ஒரு சிறுமியின் மார்பகத்தை தொடுவதை போக்ஸோ சட்டத்தின் கீழ் "பாலியல் தாக்குதல்" என்று அழைக்க முடியாது என்று நீதிபதி புஷ்பா வி கணேடிவாலாசமீபத்தில் தீர்ப்பளித்தார். இதனால் கோபமடைந்த அகமதாபாத்தை சேர்ந்த அப்பெண் "அநீதியை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது" என்று ஆணுறைகளை அனுப்பியிருக்கிறார்.


Advertisement

Advertisement
[X] Close