[X] Close

ஓபிஎஸ் கிணறுகளை ஆய்வு செய்ய ஆட்சியருக்கு உத்தரவு

Madurai-High-court-ordered-to-inspect-OPS-well

தேனி மாவட்டம் லட்சுமிபுரத்தில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு சொந்தமான கிணறுகளை நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.


Advertisement

ஓபிஎஸ்-க்கு சொந்தமான கிணறுகளுக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பைத் துண்டிக்க உத்தரவிடக் கோரி லட்சுமிபுரத்தைச் சேர்ந்த ரங்கசாமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார். அதில், மின்வாரிய விதிகளை மீறி, மின்மோட்டார்கள் பொருத்தப்பட்டு, ஒரு கிராமத்தில் இருந்து மற்றொரு வருவாய் கிராமத்திற்கு தண்ணீர் விநியோகம் செய்யப்படுவதாக குறிப்பிட்டிருந்தார். இது மின்வாரியத்தின் விதிகளுக்கு எதிரானது எனவும் கூறியிருந்தார்.

இந்த மனு மீது இன்று நடைபெற்ற விசாரணையில், ஆற்றிலிருந்து எவ்வளவு தூரத்தில் கிணறுகள் அமைந்துள்ளன, அதிலிருந்து நாள் ஒன்றுக்கு எவ்வளவு தண்ணீர் எடுக்கப்படுகிறது, எவ்வாறு விவசாய பயன்பாட்டுக்கான மின் இணைப்பு வழங்கப்பட்டது என்பது குறித்து நேரில் சென்று ஆய்வு செய்ய தேனி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டது. அது தொடர்பான விசாரணை அறிக்கையை ஆகஸ்ட் ஒன்றாம் தேதிக்குள் தாக்கல் செய்யவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close