’பள்ளிப் படிப்பை பாதியில் விட்டவர்’ என விமர்சித்த பெண்ணுக்கு நடிகர் சித்தார்த் கொடுத்த பதில் ட்விட்டரில் வைரலானது.
விவசாயிகள் போராட்டம் குறித்த டூல்கிட்டை பகிர்ந்ததாக குற்றம்சாட்டப்பட்ட பெங்களூருவைச் சேர்ந்த சூழியல் ஆர்வலர் திஷா ரவி கைது செய்யப்பட்டார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலரும் தங்கள் கருத்துகளை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஏற்கெனவே விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்திருந்த சித்தார்த், திஷா ரவி கைதுக்கும் எதிர்ப்பு தெரிவித்து, ‘டூல்கிட்’டை விமர்சித்து ட்வீட் செய்திருந்தார்.
அந்த ட்வீட்டில், ’’நீங்கள் நண்பர்களுடன் ஒரு திரைப்படத்தைப் பார்க்க விரும்பினால், அவர்கள் அனைவருக்கும் எந்த படம், எந்த நேரம், எங்கு செல்ல வேண்டும் என்று செய்தி அனுப்புகிறீர்கள்…. இதை டூல்கிட் என்றும் சொல்லலாம்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.
If you want to go watch a movie with friends, you message all of them which movie, what time and where to assemble before heading there.... This is what may be called a #Toolkit. The ugly version of this is what IT cells do. Stop the bullshit. #ShameOnDelhiPolice — Siddharth (@Actor_Siddharth) February 14, 2021
சித்தார்த்தின் இந்த ட்வீட்டை பகிர்ந்த ஹைதராபாத்தைச் சேர்ந்த கருணா கோபால் என்ற பெண், ’’யார் இந்த நபர்? பள்ளிப்படிப்பை பாதியில் விட்டவராக இருக்கலாம்? அவர் இயற்கையான அடிப்படை விஷயங்களையே ஆத்திரமூட்டும் வகையில் பதிவிடுகிறார்” என்று விமர்சித்தார்.
Who is this person ? A school drop out may be ? I see him writing baseless stuff mostly provocative in nature . pic.twitter.com/80TCImSr6B — Karuna Gopal (@KarunaGopal1) February 17, 2021
அதற்கு சித்தார்த் "இந்த பெண் 2009 இல் ஐ.எஸ்.பி.யில் நடந்த தனது குழுவிவாதத்தில் கலந்துகொள்ள பல மாதங்களாக எனக்கு அழைப்பு விடுத்துக்கொண்டிருந்தார். நானும் @JP_LOKSATTA உடன் அதில் பங்கேற்றேன். மேலும் நான் ஒரு முதுகலை பட்டதாரி. நான் என் மனதில் தோன்றியதைப் பேசினேன். அந்த பெண் தனது நேர்மை மற்றும் ஞாபகசக்தியை தனது முதலாளியிடம் விற்றுவிட்டார். இப்போது மோடியின் பொய்களையும் வாந்தியையும் பரப்புகிறார்’’ என்று பதிலடி கொடுத்தார்.
This lady badgered me for months to attend her panel discussion at ISB in 2009, which I did, along with @JP_LOKSATTA. Back then too I was a Post Graduate and I spoke my mind. She however sold both her integrity and her memory to her master. Now spreads Modi lies and vomit. https://t.co/M9SHNqvRxy — Siddharth (@Actor_Siddharth) February 17, 2021
ஆனாலும் அந்த பெண் விடுவதாக இல்லை. ’’உங்களுக்கு இடமளித்ததையே பெரிய தவறாக எண்ணுகிறேன். அதை நான் தெளிவாக செய்திருக்க வேண்டும்’’ என்றும், சித்தார்த்தை தான் அழைக்கவில்லை; தன்னுடைய பள்ளியிலிருந்து யாரை அழைத்திருக்க வேண்டும் என்றும் ட்வீட் செய்தார்.
I CHAIRED the session at #ISB . You were a panellist brought in by someone from the school . My invitees were 2 WEF ( World Economic Forum ) Young leaders . Accommodating you is proving to be a big mistake :) should have done my due diligence https://t.co/S1CjiVcTSw — Karuna Gopal (@KarunaGopal1) February 17, 2021
சித்தார்த்தும் அதை விடுவதாக இல்லை. ‘’என்னிடம் கோரிக்கை வைத்த நிறைய மெயில்கள் இருக்கிறது. அதை பொதுவெளியில் பகிரவேண்டுமா? டெக்னாலஜி மிகவும் அழகானது’’ என்று கூறினார்.
I just found many emails and appointment requests from you to me over the years in my Gmail inbox. Would you like me to share them in public domain? Technology is a beautiful thing:)
This will my last contact with you in this life...you have already taken too much of my time. https://t.co/mV0u74U8ee — Siddharth (@Actor_Siddharth) February 17, 2021
கருணா தான் மெயில் எதுவும் அனுப்பவில்லை என மறுத்ததுடன், சித்தார்த் தொழில்முறை தெரியாத ஒரு நபர் என்றும் குறிப்பிட்டார்.
For a fairly old person you seem to be young in the Grey Department
Mails will be sent from my office on my name .Of course you wouldn’t know this . Only professionals do . Hope you will grow up one day to know that !
Get off my TL https://t.co/tOGxEvmjEp — Karuna Gopal (@KarunaGopal1) February 17, 2021
இதற்கு சரியான பதிலடி கொடுக்கவிரும்பிய நடிகர் சித்தார்த், அந்த பெண் தன்னுடைய மகனின் ஓவிய கண்காட்சியை துவக்கிவைத்தால் அவன் சந்தோஷப்படுவான் என்று அனுப்பிய மெயியின் ஸ்க்ரீன்ஷாட்டை பகிர்ந்தார்.
Drops mic ? https://t.co/lMchoS8Aaf pic.twitter.com/opSkpxXXVO — Siddharth (@Actor_Siddharth) February 17, 2021
இது ட்வீட் செய்யப்பட்ட சில நிமிடங்களிலேயே 8 ஆயிரம் லைக்குகளைப் பெற்றதுடன், பலரும் அந்தப் பெண்ணின் பொய்யான ட்வீட்டுகளுக்கு சித்தார்த் பதிலடி கொடுத்துவிட்டதாகக் கூறி கமெண்டுக்களை பதிவிட்டு வருகின்றனர்.
Loading More post
'விரும்பினால் மாட்டிறைச்சி சாப்பிடுவேன்; அதை கேட்க நீங்கள் யார்?' - சித்தராமையா ஆவேசம்
ஞானவாபி மசூதி வழக்கு - வாரணாசி நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு
'திமுகவினர் கெடுவைத்தால் அண்ணாமலை கூட்டத்தில் பேச ஆள் இருக்கமாட்டார்கள்' -சுப.வீரபாண்டியன்
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்