Published : 18,Feb 2021 11:04 AM

தமிழில் ரீமேக் ஆகிறது 'தி கிரேட் இந்தியன் கிச்சன்'!

The-Great-Indian-Kitchen-is-now-being-remade-by-Kannan

கருத்தியல் ரீதியாக அதிகம் விவாதிக்கப்பட்ட மலையாள படமான 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' தமிழில் ரீமேக் ஆகவுள்ளது. இயக்குநர் கண்ணன் இப்படத்தை இயக்கவுள்ளார்

சமீத்தில் கருத்தியல் ரீதியில் தமிழ்ப் பரப்பிலும் அதிகம் விவாதிக்கப்பட்ட மலையாள படம், 'தி கிரேட் இந்தியன் கிச்சன்'. இயக்குநர் ஜோ பேபி இயக்கிய இந்த சினிமா Neestream தளத்தில் வெளியானது. சலு கே தாமஸ் ஒளிப்பதிவு ,சூரஜ் வெஞ்சரமுடு, நிமிஷா சஜயன் ஆகியோரின் எதார்த்த நடிப்பு இப்படத்திற்கு கூடுதல் பலம். இந்தியாவைப் பொறுத்தமட்டில் குடும்பம் என்கிற அமைப்பு எப்படி ஒரு பெண்ணின் உழைப்பை சுரண்டுகிறது என்பது குறித்தும், இந்தியப்பெண்களின் வாழ்வியல் சிக்கலையும் மிக அழுத்தமாக பதிவு செய்தது 'தி கிரேட் இந்தியன் கிச்சன்'.

image

100 நிமிடங்கள் மட்டுமே ஓடக் கூடிய இந்த சினிமா இந்தியப் பெண்களின் நூற்றாண்டுகால வலியை பேசியது. 'நீ ஸ்ட்ரீம்' என்ற ஓடிடியில் வெளியாகி பிரபலமான இந்தியன் கிச்சன் படம் குறித்து சமூக வலைதளங்கள் எழுதித் தீர்த்தனர். கருத்தியல் ரீதியில் தமிழ்ப் பரப்பிலும் அதிகம் விவாதிக்கப்பட்ட மலையாள படமாகவும் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' மாறியது.

image

இந்நிலையில் அப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ளது. இரண்டு மொழிகளிலும் இயக்குநர் கண்ணன் இப்படத்தை இயக்கவுள்ளார்.  இவர் ஜெயம்கொண்டான், வந்தான் வென்றான், கண்டேன் காதலை, சேட்டை போன்ற படங்களை இயக்கியவர். தியேட்டர் ரிலீஸ்க்கு ஏற்ப கதையில் மாற்றம் செய்யப்பட்டு இப்படம் உருவாகும் என்றும், இரண்டு மொழிகளிலும் பரிட்சயமான நடிகர்கள் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' ரீமேக் படத்தில் நடிப்பார்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. ஒரே நேரத்தில் இப்படம் தயாராக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்