Published : 17,Feb 2021 02:17 PM

“புதிய மைதானம்; அகமதாபாத் போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்பனை” - கங்குலி

Ahmedabad-Tickets-are-sold-out-for-India-versus-England-says-BCCI-president-Sourav-Ganguly

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து முடிந்த நிலையில் எஞ்சியுள்ள இரண்டு டெஸ்ட் மற்றும் ஐந்து டி20 கிரிக்கெட் போட்டிகள் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மோட்டேரா மைதானத்தில் நடைபெற உள்ளது. அதில் வரும் 24 ஆம் தேதியன்று நடக்கவுள்ள டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெற உள்ளது. 

இந்நிலையில் அகமதாபாத் போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்பனையாகிவிட்டன என தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் சவுரவ் கங்குலி. 

image

“அகமதாபாத் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் முற்றிலும் விற்பனையாகிவிட்டது. நான் ஜெய் ஷாவுடன் பேசினேன். ஆறேழு வருடங்களுக்கு பிறகு மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் அகமதாபாத்தில் நடத்தப்படுகிறது. அதனால் அவர் ஆர்வமாக உள்ளார். அதற்கு காரணம் அவர்கள் கட்டியுள்ள புதிய மைதானம் தான். இங்கு நடைபெற உள்ள பகல் இரவு டெஸ்ட் போட்டி ஒரு வரலாறாக இருக்கும். அனைத்து ஸ்டேண்டுக்குமான டிக்கெட்டுகள் விற்றாகிவிட்டது. டெஸ்ட், டி20 என அனைத்து போட்டிகளுக்கும் டிக்கெட்டுகளை விற்பனையாகியுள்ளன” என அவர் தெரிவித்துள்ளார். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்