கிரிக்கெட் மைதானத்தில் 'மாஸ்டரும் வலிமை'யும்... அஸ்வின் ஓபன் டாக்..!

கிரிக்கெட் மைதானத்தில் 'மாஸ்டரும் வலிமை'யும்... அஸ்வின் ஓபன் டாக்..!
கிரிக்கெட் மைதானத்தில் 'மாஸ்டரும் வலிமை'யும்... அஸ்வின் ஓபன் டாக்..!

சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட்டின்போது நடந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து அஸ்வின் தனது யூடியூப் சேனலில் பேசியிருந்தார். அதில், “தமிழகத்தில் நாம் எவ்வளவு தூரம் சினிமாக்கள் மீது பைத்தியமாய் இருக்கிறோம் என்பது ஒரு எடுத்துக்காட்டு நிகழ்ந்தது. நான் பவுண்டரி லைனில் நின்று கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் 'தல அஸ்வின் அஸ்வின் அஸ்வின்' என்று கூப்பிட்டார். 'என்னப்பா' என்று கேட்டேன். திடீரென்று 'வலிமை அப்டேட் எப்படி' என்றார். என்னய்யா சொல்ற? வலிமையா? எனக்கு ஒன்னுமே புரியல. அப்படியே ஆடிபோயிட்டேன். அப்புறம் கூகுள் பண்ணி பார்த்தேன். எனக்கு சிரிப்பு தாங்கவே முடியல.

அடுத்த நாள் மொயின் அலி வராறு. வாட் இஸ் வலிமை என்று கேட்டார். அப்போதான் தெரிந்தது மொயின் அலியும் அதே இடத்தில் நிற்கும்போது வலிமை அப்டேட் கேட்டுருக்காங்க. கலக்கிட்டீங்கப்பா நீங்க. மாஸ்டர் படம் கிரேட். ஆனால் இங்கிலாந்து வீரரிடம் வலிமை அப்டேட் கேட்டதெல்லாம் அவுட்ஸ்டேண்டிங்” எனத் தெரிவித்தார்.

இதனிடையே இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நடுவே தமிழக வீரர் அஸ்வின், மைதானத்தில் மாஸ்டர் திரைப்படத்தின் வாத்தி கம்மிங் பாடலின் நடன அசைவைச் செய்தது ரசிகர்களை ஆர்ப்பரிக்க வைத்தது. அஸ்வினின் இந்த வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com