மத்தியப் பிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தில் 54 பயணிகளுடன் சென்ற பேருந்து கால்வாய்க்குள் விழுந்தது. இதில் 32 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாலத்தின் மீது பேருந்து சென்றபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்ததோடு, பாலத்தின் தடுப்புக் கட்டைகளை உடைத்துக் கொண்டு கால்வாய்க்குள் விழுந்துள்ளது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த சுமார் 32 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 20-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும், 7 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
சித்தியிலிருந்து சாட்னாவுக்கு அந்தப் பேருந்து சென்றுள்ளது. சம்பவ இடத்தில் மீட்பு படையினர் பணியில் இறங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்ச ரூபாய் வழங்க உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
“இந்த சம்பவத்திற்காக நான் மிகவும் வருந்துகிறேன். போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது” என மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.
Loading More post
நாட்டையே உலுக்கிய ஹைதராபாத் என்கவுண்ட்டர் போலியானது - விசாரணைக்குழு அதிர்ச்சி தகவல்
துப்பாக்கிச் சூட்டில் மூளைச்சாவு அடைந்த போதும் 5 பேருக்கு வாழ்வளித்த 6 வயது சிறுமி!
திருமணமான ஆறே மாதத்தில் நீட் தேர்வுக்கு படித்து வந்த பெண் மருத்துவர் தற்கொலை!
தூக்கத்திலேயே பிரிந்த உயிர் - தந்தை இறந்த சோகத்திலும் ப்ளஸ் டூ தேர்வெழுதிய மகன்!
இடம்பெயர்கிறது மெரினாவிலுள்ள மகாத்மா காந்தி சிலை; தடையில்லா சான்றிதழ் வழங்கியது மாநகராட்சி
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்