Published : 15,Feb 2021 11:25 AM
ஜெயலலிதா வழியில் அடிபிறழாமல் முதல்வர் ஆட்சி நடத்துகிறார்: ஓபிஎஸ்

ஜெயலலிதா வழியில் அடிபிறழாமல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி நடத்தி வருவதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கோவை பேரூரில் 123 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை செய்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசினார். அப்போது , “ஒரு கட்சி எப்படி செயல்பட வேண்டும் என மாற்றிக்காட்டியவர் ஜெயலலிதா. ஜெயலலிதா வழியில் அடிபிறழாமல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி நடத்தி வருகிறார். சட்டமன்றத்தேர்தலில் வெற்றி பெற்று ஜெயலலிதாவுக்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டது அதிமுக. நமக்கு சாதி மத பேதமில்லை. காற்றில் பறக்கவிடும் அறிவிப்புகளை கொடுப்பதுதான் திமுக” எனப்பேசினார்.