டாடா நிறுவனத்தின் சிஇஓ & தலைமை இயக்குநராக பொறுப்பேற்கிறார் மார்க் லிஸ்டோசெல்லா

டாடா நிறுவனத்தின் சிஇஓ & தலைமை இயக்குநராக பொறுப்பேற்கிறார் மார்க் லிஸ்டோசெல்லா
டாடா நிறுவனத்தின் சிஇஓ & தலைமை இயக்குநராக பொறுப்பேற்கிறார் மார்க் லிஸ்டோசெல்லா

உலக அளவில் பிரபலமான டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமை இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக மார்க் லிஸ்டோசெல்லா பொறுப்பேற்க இருக்கிறார்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தற்போதைய தலைமை இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக குண்டர் புட்செக் பணியாற்றி வரும் நிலையில், அவரது ஒப்பந்த பதவிகாலம் முடிவடைவதாலும், தனிப்பட்ட காரணத்திற்காகவும் அவர் ஜெர்மனிக்கு குடிபெயர இருப்பதால் அவருக்கு மாற்றாக புதிய தலைமை இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக மார்க் லிஸ்டோசெல்லா வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் பதவி ஏற்க உள்ளார்.

டாடா மோட்டார்ஸின் கோரிக்கை வைத்ததின் அடிப்படையில்  குண்டர் புட்செக் ஜூன் மாத இறுதி வரை பணியாற்ற சம்மதம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து டாடா மோட்டார்ஸ் தலைவர் சந்திர சேகரன் கூறும் போது, “ டாடா மோடடார்ஸ் நிறுவனத்திற்கு மார்க்கை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மார்க் தனது தொழில் வாழ்கையில், வணிக வாகனங்களின் மீது ஆழ்ந்த அறிவும் நிபுணத்துவமும் பெற்ற தலைவராக உள்ளார். இந்தியாவிலும் அவர் விரிவாக செயல்பட்டு அனுபவத்தை பெற்றுள்ளார். டாடா மோட்டார்ஸ் இன்னும் அதிக உயரங்களை பெற அந்த அனுபவமும், அறிவும் நிச்சயம் உதவிகரமாக இருக்கும். கடந்த 5 ஆண்டுகளாக, டாடா மோட்டார்ஸை வெற்றிகரமாக வழிநடத்தியதற்கு குண்டர் புட்செக் நன்றி” என்றார். 

இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் தலைமை நிர்வாக அதிகாரியாக புட்செக் உள்ளார். டாடா மோட்டார்ஸில் அவர் இணைவதற்கு முன்னால், ஏர் பஸ்ஸின் முதன்மை இயக்கு அலுவலராக பணியாற்றினார். அதற்கு முன்னதாக டெய்ம்லர் நிறுவனத்தில் 25 வருடங்கள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

மார்க் புசோ டிரக் மற்றும் பேருந்து நிறுவனத்தின் (Fuso Truck and Bus Corporation) தலைவராகவும், தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றினார். அதே போல ஆசியாவின் டெய்ம்லர் ட்ரக்ஸ் நிறுவனத்தின் தலைவராக பணியாற்றியுள்ளார். 2008 மற்றும் 2014 இடைப்பட்ட காலக்கட்டங்களில் டெய்ம்லர் நிறுவனத்தின் தலைமை அதிகாரி மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றிய போது கிரீன் ஃப்ல்டு அமைப்பை நிறுவியதோடு மட்டுமல்லாமல் கன ரக வாகனங்களை தயாரித்து விற்க முடிவெடுத்தார். அந்த முயற்சியின் பலனாக கடந்த 2012 ஆம் ஆண்டு பாரத் பென்ஸ் தொடங்கப்பட்டது.

தற்போது ஐன்ரைடு நிறுவனத்தின் உறுப்பினராக உள்ள அவர் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை மிட்சுபிஷி புசோ டிரக்ஸ் மற்றும் பஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணியாற்றினார். அந்த காலக்கட்டங்களில் அந்த நிறுவனத்தின் வருமானத்தை பெருமளவு உயர்த்தினார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com