[X] Close

முதலமைச்சர் பழனிசாமியை புறக்கணிக்கிறதா நமது எம்ஜிஆர் நாளிதழ்?

MGR-article-ignore-Chief-Minister-Palani

அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆரில் கடந்த சில நாட்களாக முதலமைச்சர் பழனிச்சாமி பற்றிய செய்தி இடம் பெறவில்லை. இதனால் அவர்  புறக்கணிக்கப்படுகிறாரா என அதிமுகவினரிடையே சந்தேகம் எழுந்துள்ளது. 


Advertisement

அதிமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதிமுகவின் நிலைப்பாட்டை, கட்சித் தலைமை எடுக்கும் முடிவுகள், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு அதிரடியான பதில்கள் என அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்ஜிஆர் அந்த கட்சித் தொண்டர்கள் மட்டுமின்றி அரசியல் களத்திலும் உற்றுநோக்கப்படும் நாளிதழாகவே இருந்து வருகிறது. 

அண்மையில், நமது எம்.ஜி.ஆரின் 30ம் ஆண்டு விழாவிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துக்கடிதம் அனுப்பியது அந்த நாளேட்டில் செய்தியாக வெளியிடப்பட்டது. மத்திய அரசை நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் விமர்சித்து வரும் நிலையில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடு நமது எம்.ஜி.ஆர்தான் என முதலமைச்சர் பழனிசாமி அதில் கூறியிருந்தார். ஆனால் கடந்த சில நாட்களாக நமது எம்.ஜி.ஆர் நாளிதழில் முதலமைச்சர், அமைச்சர்கள் பற்றிய செய்திகளைக் காணமுடியவில்லை. உட்கட்சி பூசல் உச்சகட்டத்தை அடைந்திருப்பதையே இதுகாட்டுவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். அதிமுகவின் பல்வேறு மட்டங்களில் இருந்து நெருக்கடி வருவதை நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் செய்திகள் பிரதிபலிப்பதாகவும் பல்வேறு தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர்.  


Advertisement

ஜெயலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பிளவுகள் உருவான நிலையில், அந்த கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேட்டிலும் அதற்கேற்றவாறு செய்திகளின் தன்மை மாறி வருகிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி நடக்கும் நிலையில் அரசின் செய்திகள் அதிமுக நாளேட்டில் இடம்பெறாமல் இருப்பதற்கு காரணம் துணை பொதுச்செயலாளர் தினகரனின் அழுத்தமே என்றும் அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close