Published : 18,Jul 2017 11:09 AM

இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பரத் அருண் நியமனம்

Bharat-Arun-appointed-bowling-coach-of-India-team

இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பரத் அருண் நியமிக்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது. 

அதேநேரம், பீல்டிங் பயிற்சியாளராக ஸ்ரீதர் மற்றும் உதவி பயிற்சியாளராக சஞ்சய் பாங்கர் ஆகியோர் தொடருவார்கள் என்றும் பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் 2019ம் ஆண்டு உலகக் கோப்பை தொடர்வரை அந்த் அந்த பதவியில் தொடருவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பந்துவீச்சு பயிற்சியாளராக ஜாகீர் கான் மற்றும் வெளிநாட்டு தொடரின் பேட்டிங் பயிற்சியாளராக டிராவிட் நியமிக்கப்படுவது குறித்து இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி சமீபத்தில் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்