[X] Close

பொன்.ராதாகிருஷ்ணன்- கமல்ஹாசன் சந்திப்பு

Pon-Radhakrishnan--Kamal-Hassan-meets

மத்திய இணையமைச்சர் பொன்.ராதா‌கிருஷ்ணனை நடிகர் கமல்ஹாசன் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

சென்னையில் உள்ள பொன்.ராதாகிருஷ்ணனின் இல்லத்திற்கு வந்த கமல்ஹாசனை, பொன். ராதாகிருஷ்ணன் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். சந்திப்பின் போது, தற்போதைய அரசியல் சூழல்கள் மற்றும் பொதுவான விஷயங்கள் குறித்து இருவரும் பேசியதாக கூறப்படுகிறது.

ஜல்லிக்கட்டு தொடர்பாக கமல் ஹாசனுக்கும், பாரதிய ஜனதா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமிக்கும் இடையே கருத்து மோதல் எழுந்திருக்கும் நிலையில், பொன்.ராதாகிருஷ்ணனுடான சந்திப்பு நடைபெற்றிருக்கிறது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close